பண்டாரநாயக்கா சமாதி வீட்டுத் தொகுதியில் காடையர் அட்டகாசம்.
நிட்டம்புவை, ஹொரகொல்லையில் பண்டாராயக்கா சமாதி அமைந்துள்ள காணியில் தனியார் நிறுவனத்தால் கட்டப்பட்டுவரும் வீட்டுத் தொகுதிக்குள் நுழைந்த 20 பேர் வரையிலான காடையர் குழு அங்கு சுவர்களை உடைத்து சுமார் நாலரை இலட்சம் ரூபா பெறுமதிக்கு மேல் அழிவை ஏற்படுத்தியுள்ளது. 350 வீடுகளைக் கொண்டதாக அமைந்த்து இந்த வீட்டுத் தொகுதி. குற்றவாளிகளைக் கைது செய்ய பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 comments :
Post a Comment