Tuesday, July 17, 2012

ஜனாதிபதிக்கான உதவிகள் ஜெனீவாவுடன் நின்றுவிடாது தொடர்ந்து வழங்கப்படுமாம்

எமது உதவிகள் ஜெனீவாவுடன் நின்று விடாது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எப்போதும் உதவி வழங்குவோம் என, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் றிஸ்வி முப்தி தெரிவித்துள்ளார். வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி கோரும் நிகழ்வு, அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஏற்பாட்டில் நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து 1990 ஆண்டு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், இம்மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகின்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்வது தொடர்பில், இந்த கூட்டத்தின்போது விரிவான ஆராயப்பட்டதாகவும், இது தொடர்பான இணையதளமும் ஆரம்பித்து வைக்கப்பட்டதாவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com