ராஜகிரிய யுவதியின் கொலையுடன் தொடர்புடைய இளைஞனுக்கு மரண தண்டனை
2005 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ராஜகிரிய ரோயல் பார்க் சொகுசு மாடி வீட்டு தொகுதியில் யுவதியொருவரின் கொலையுடன் தொடர்புடைய இளைஞருக்கு விதிக்கப் பட்டிருந்த 14 வருட சிறைத் தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் இரத்து செய்துள்ளதுடன், அவருக்கு மரண தண்டனையை மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன கருத்து தெரிவிக்கையில், ரோயல் பார்க் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை மேற்கொண்டது. இதனையடுத்து மரணமான யுவதியின் காதலர் என சந்தேகப்பட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. 12 வருட சிறைத்தண்டனையும் 50 ஆயிரம் ரூபா அபராதமும் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
சந்தேக நபருக்கு வழங்கப்பட்ட தண்டனை போதாதென அம்மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்ததது. சந்தேக நபருக்கு கொலை குற்றச்சாட்டின் கீழ் தண்டனை வழங்கப்பட வேண்டுமென மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து இன்று மேல் நீதிமன்றத்தின் தீர்ப்பு இரத்துச் செய்யப்பட்டு, மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment