நாட்டில் சிங்கள மக்கள் செத்துவிட்டார்களாம் கூறுகின்றார்கள் அமரசேகர .
தற்போது இந்த நாட்டில் சிங்களவர்கள் மரணிக்கும் விதமாகத்தான் செயல்கள் நடைபெறுகின்றன, நாட்டில் இடம் பெறும் எந்தச் செயல்கள் தொடர்பாகவும் அவர்களைக் கணக்கிலெடுப்பது இல்லை என்று தேசபக்தி தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கொழும்பில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இலங்கை அரசியலில் இந்தியாவும் அமெரிக்காவும் கைவைக்கின்றன என்று கூறிய அவர்
பிரபாகரன் ஆயதம் கொண்டு அடைய முயன்றதை சுற்றிவளைத்து பன்னாட்டு மக்களின் தலையீட்டுடன் பெற்றுக் கொள்ள முயற்சி நடைபெறுகின்றது. யுத்த காலத்தில் இந்த நாட்டிலிருந்து சென்ற நோர்வேகாரர்கள் மீணடும் வந்துள்ளனர். அமெரிக்கா நமது நாட்டுக்கெதிராக மனிதவுரிமை மீறல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி நாட்டை மீண்டும் பின்தள்ளப் பார்க்கின்றது. அவ்வாறு நாட்டை ஆக்கிரமித்து அமெரிக்க போர்ப்படையை இலங்கையில் நிலைநிறுத்த முயல்கின்றது இன்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
தேசபக்தி தேசிய அமைப்பின் செயலாளர் மருத்துவர் வசந்த பண்டார பேசுகையில், மேனன் அவர்கள் இலங்கைகு வருகின்றார். 13 வது திருத்த்தை நடைமுறைப்படுத்தி வடக்கில் அதிகாரத்தைப் பகிர வேண்டும், வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றார். அவர் சொல்லி முடிக்கு முன்பே வடக்கில் மாகாண சபைத் தேர்தல் நடத்த வேண்டும் என்கின்றனர் விஜித ஹேரத் எம்.பி. டில்வின் சில்வா ஆகிய ஜேவிபி காரர்கள் என்றார்.
0 comments :
Post a Comment