Tuesday, July 24, 2012

எனக்கு ஒன்றுமே ஞாபகம் இல்லை! சீஐடி யினருக்கு கையை விரித்தார் துமிந்த

பாதுகாவலர்களுடன் நான் கொலன்னாவ பிரதேசத்திற்கு சென்றதும், அதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டிருந்நதுமே எனது நினைவில் உள்ளது எனவும், முல்லேரியாவில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் எனக்கு எதுவும் நினைவில் இல்லை என, பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கு விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் இடம்பெற்றபோது, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிடம் பெற்றுக்கொண்ட வாக்கு மூலத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அத்துடன், பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரனின் கொலை வழக்கு விசாரணை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டதுடன் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 18 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் கொழும்பு மேலதிக நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment