பல்கலைக்கழக மாணவிகள் இருவர் விளக்கமறியலில்
கடந்த ஜூன் மாதம் 25 ஆம் திகதியும், ஜூலை மாதம் 2 ஆம் திகதியும், கைது செய்யப்பட்ட றுகுணு பல்கலைக்கழக மாணவிகள் இருவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்
கைதுசெய்யபட்ட இருமாணவிகளும் புதிய மாணவர்களை பகிடிவதைக்குட்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையிலேயே மாத்தறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இரு மாணவிகளும் மாத்தறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
0 comments :
Post a Comment