வாடகை கார்களால் குற்றங்கள் அதிகரிப்பு! வாடகைக் கார் வழங்குனர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு
வாடகைக்கார்கள், குற்றச்செயல்களில் ஈடுபடுத்தப்படுவதனால், வாடகைக் கார் கம்பனிகளுக்கு எதிராக, பொலிஸார் கடும் கட்டுப்பாடுகளை விதிக்கவுள்ள தாகவும், அறிமுகமற்றவர்களுக்கு வாடகைக்கார்களை வழங்கும்போது அவர்களின் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும், பொலிஸார் வாடகை கார் கம்பனி உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
கடந்த வாரங்களில் வாடகைக் கார்களை பயன்படுத்தி, பல்வேறு குற்றச்செயல்கள் நாட்டில் இடம்பெற்றுள்ளதாகவும், வாடகைக் கார்கள் மூலம் ஏற்படும் குற்றச்செயல்களுக்கு அதன் உரிமையாளர்களும், ஊழியர்களும் பொறுப்புதாரிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றச்செயல்களில் ஈடுபடும் வாடகைக்கார்களின் ஊழியர்களும், உரிமையாளர்களும், பொலிஸாரினால் கைது செயயப்படுவதுடன், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படுமெனவும், பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வாடகைக்கார் கம்பனிகள், கார்களை வாடகைக்காக வழங்கும்போது குறித்த நபர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென்றும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment