சிறு குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதனை தடுக்க சட்டம்
வேலைவாய்ப்பு கருதி தாய்மார்கள் வெளிநாடு வெல்வதனால் குழந்தை களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை தவிர்க்கும் வகையில், 18 வயதுக்குட் பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நலன்புரி சேவைகள் அமைச்சுடன் இணைந்து அமைச்சரவை பத்திரமொன்றை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள தாய்மார்கள் வேலைவாய்ப்புக்கருதி வெளிநாடு செல்வதனை தவிர்க்குமாறு சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment