கைதிகளுக்கு எந்தவித அநியாயமும் ஏற்படுத்தா திருக்க அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
"விசாரணைகளை துரிதபடுத்த மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன"
தமிழ் கைதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதபடுத்துவதத மூன்று விசேட நீதிமன்றங்களை அமைக்கும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாகவும், இவர்களுக் கெதிரான வழக்கு விசாரணைகள் இம்மாதத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும், சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீர தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா சிறையில் புலிச் சந்தேக நபர்கள் 3 சிறைச்சாலை அதிகாரிகளை பணயக் கைதிகளாக தடுத்து வைத்ததால் தான் குழப்பம் ஏற்பட்டது. நீதிமன்ற உத்தவிற்கமைய வேறு சிறைக்கு இடமாற்றப்படவிருந்த புலிச்சந்தேக நபர்கள் சிலரை மீளவும் வவுனியா சிறைக்கு அழைத்து வருமாறு கோரியே புலிகள் சிறச்சாலையில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.
புலி சந்தேக நபர்களின் கோரிக்கையை சிறை அதிகாரிகளினால் நிறைவேற்ற முடியாது. இந்த நிலையிலே குழப்பத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு விசேட அதிரடிப்படையின் ஒத்துழைப்புடன் சிறை அதிகாரிகள் மீட்கப்பட்டனர். துப்பாக்கியோ அல்லது குண்டுளோ பயன்படுத்தப்படாமல் சிறை அதிகாரிகள் மீட்கப்பட்டனர்.
புலி சந்தேக நபர்கள் பல்வேறு ஆயுதங்கள், வெளிநாடுகளுக்கு பேசும் தொலைபேசிகள் பேன்றவற்ளை இருந்ததன் சிறைச்சாரைக்ள் வைத்திருந்துள்ளனர் இதன்மூலம் இந்த இப் புலி சந்தேக நபர்களின் நடவடிக்கையின் பயங்கரம் தெளிவாகிறது. ஒரு கைதி இறந்துள்ளதால் இது தொடர்பான பிரேத பரிசோதனை நடைபெற்றது. ஆனால் நீதவானின் தீர்ப்பு இதுவரை வழங்கப்படாத நிலையில் தொடர்ந்து இது குறித்து விசாரணைகள் நடத்தப்படுகிறது. எனவே இந்த மரணம் குறித்து முன்கூட்டி எந்த வித முடிவுக்கும் வரமுடியாது. இவர் இருதய நோய்க்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். பிரேத பரிசோதனையின் பின்னர் உண்மை வெளியாகும். இறந்தவரின் சடலத்தை உறவினர்கள் கோரியுள்ளதாக கூறப்பட்டபோதும் சடலத்தை ஏற்க யாராவது முன்வரவேண்டும். எனக்குத் தெரிந்தளவில் இதுவரை யாரும் சடலத்தை பொறுப்பேற்க முன்வரவில்லை.
சம்பவம் தொடர்பாக அரசாங்கம் விசாரணை நடாத்துகின்றது. அமைச்சு மட்டத்திலும் குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்தப்படுகிறது. இது தொடர்பாக தகவல் திரட்டப்படுகிறது. எந்த கைதிக்கும் எதுவித அநியாயமும் ஏற்படுத்தாதிருக்க எமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
வவுனியா சம்பவத்தின் மூலம் முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கும் நடவடிக்கை நிறுத்தப்படாது. தமிழ் கைதிகளின் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களின் வழக்குகளை விசாரணை செய்வதற்கு மூன்று விசேட நீதிமன்றங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இந்த மாதத்தில் வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என சிறைச்சாலை மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிரி கஜதீர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment