இலங்கையிடம் முன்னேற்றம் இருந்தால் ஜெனிவா மீளாய்வுக் கூட்டத்தில் ஆதரிப்பார்களாம் - சிவ சங்கர்
இலங்கையில் ஏற்றுகொளள்ளப்படும் அரசியல் தீர்வு, மற்றும் மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றம் காணப்படா விட்டால் வரும் நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெறும் மீளாய்வுக் கூட்டத் தொடரில் இலங்கையை இந்தியா ஆதரிப்பது சாத்தியமில்லை என்று இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் கூறியதாக கடந்த 2ம் திகதிய நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் பற்றி மனி உரிமைச் சபைக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பொறுப்பு இந்திய, ஸ்பானியா, மற்றும் பெனின் ஆகிய மூன்று நாடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த முறை நடைபெற்ற மாநாட்டில் அமெரிக்கா தலைமையில் இலங்கைகு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இலங்கையில் மனித உரிமைகளைப் பேணுதல் மற்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் தொடர்பில் மதிப்பீடு செய்யப்படவுள்ளதாகவும், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகின்றது.
அத்துடன், கடந்த மாநாட்டில் இந்தியா, இலங்கைக்கு எதிராக வாக்களித்ததற்கு தமிழ்நாட்டின் அழுத்தம் காரணம் அல்ல என்றும், 2009 ம் ஆண்டில் 13 வது திருத்தத்தை நடைமுறைப் படுத்துவதாக அளித்த உறுதிமொழியை இலங்கை நிறைவேற்றாததே காரணம் என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகின்றது.
0 comments :
Post a Comment