Sunday, July 1, 2012

போதைப் பொருள் கடத்தலே எல்.ரி.ரி.ஈ. நிதி திரட்டு வதற்கான மூலவளமாக இருந்தது -கலாநிதி பாலித

போதைப் பொருள் கடத்தலானது எல்.ரி.ரி.ஈ யினருக்கு நிதி சேகரிப்புக்கு பிரதான மூலவளங்களில் ஒன்றாகத் திகழ்ந்தது என்று, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரத் தூதுவர் கலாநிதி பாலித கொகன போதைப் பொருள் அறிக்கையினை மேற்கோள் காட்டிக் தெரிவித்துள்ளார்.

கடந்த 26 ம் திகதி "அபிவிருத்திக்கு அச்சுறுத்தலான போதைப் பொருளும் குற்றமும்" என்ற தொனிப் பொருளில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றும் போது கலாநிதி பாலித இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பலநாடுகளில் பயங்கரவாத இயக்கங்கள் தங்களுக்கு நிதி சேர்ப்பதற்காக போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுகின்றன எனவும், இலங்கையின் போதைப் பொருள் கடத்தல் விடயம் தொடர்பிலான அனுபவமானது பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதிலும் தொடர்பு பட்டிருந்தது.

பயங்கரவாதிகள் தமது நிதி சேகரிப்புக்காக, நாடுகளுக் கிடையில் பணம் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவது தவிர்க்க முடியாத ஒன்று எனவும், ஆட்கடத்தலிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர் என மேலும் அவர் கருத்து தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com