இலங்கையை சேர்ந்தவர்கள் சுவிற்சர்லாந்து தேசிய வங்கியில் வைப்பு செய்துள்ள பணத்தின் மொத்த பெறுமதி 85 மில்லியன் சுவிஸ் பிராங்க்குக்கு (CHF) மேற்பட்டது என சுவிற்சர்லாந்து தேசிய வங்கியின் உத்தியோகபூர்வ தகவலில் இருந்து அறிய முடிகின்றது.
சுவிற்சர்லாந்து வங்கியில் பணம் வைப்பு செய்பவர், முதலீடு செய்பவர், மற்றும் கடன்காரர்கள் என்போரின் விபரங்களை வங்கி நிர்வாகம் வெளியிடுவதில்லை. இதனால் அரசாங்கங்கள், கம்பனிகள் மற்றும் தனி நபர்களின் கறுப்புப் பணம், மற்றும் கள்ளத்தனமாகச் சேர்த்த பணம் பற்றிய தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
2002 முதல் 2011 வரையான காலப்பகுதியில் 200 க்கு மேற்பட்ட நாடுகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் என்பன ஆண்டறிக்கையில் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான வைப்புக்கள் சேமிப்புக் கணக்கிலேயே வைப்பு செய்யப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment