வடகிழக்கு வைத்தியசாலைகளுக்கு அமெரிக்கா 60 மில்லியன் நிதி ஒதுக்கீடு.
அமெரிக்காவின் சர்வதேச வைத்திய மற்றும் சுகாதார அமைப்பு, வடக்கு கிழக்கு மாகாணங்களில் 4 வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்யவதற்கென 60 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு, முன்வந்துள்ளது. யாழ்., மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகள், தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை, கிளிநொச்சி ஆதார வைத்தியசாலை ஆகியன இத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படவுள்ளன.
இது தொடர்பான ஒப்பந்தம், சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அமைச்சின் செயலாளர் டொக்டர் நிஹால் ஜயதிலக, சர்வதேச மருத்துவ மற்றும் சுகாதார அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ஜெகன் தம்பையா மறறும் அவ்வமைப்பின் இலங்கை கிளையின் பணிப்பாளர் நிமல் எஸ். பெரேரா ஆகியோர் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment