இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் கள்தான் நாட்டில் தற்போதுள்ள குற்றச் செயல்களுக்கு காரணம் என்று ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன. மக்களும் அதனை நம்புகிறார்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்றும், கடநத சில ஆண்டுகளில் இடம் பெற்ற குற்றச் செயல்களில்( ஆண்டுக்கு 1300 வரை ) சுமார் 0.6%மாத்திரமே தப்பியோடிய இரணுவத்தினர் சம்பந்தப்பட்டவையாகும் என்று சிலோன் டுடேசெய்தி இதழுக்கு இராணுவப் பிரிகேடியர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 50,000 தப்பியோடிய இராணுவத்தினரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும், தப்பியோடிய இராணுவத்தினர் பகிரங்கமாக வெளியில் திரிய முடியாது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு தப்பியோடியவர்களுக்கு வேறெங்கும் தொழிலும் கிடைக்காது எனவும், அதனால் அவர்கள் தங்களிடம் உள்ள ஆயுதம் மற்றும் திறன்களைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதுடன், அவ்வாறான குழுக்களுக்கும் தலைமை தாங்குகிறார்கள், அத்துடன் இவ்வாறு தப்பியோடியவர்கள் பாதாள உலகக் குழுக்களுலும் காணப்படுகினறனர் என்று குறிப்பிட்ட அவர், தற்போது மாதாந்தம் சராசரி 500 வரையிலான தப்பியோடிய இராணுவத்தினர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment