தேர்தல் கால சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை அகற்றுவதற்கு, தேர்தல் திணைக்களம், பொலிஸாருக்கு 50 லட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகவும், குறித்த நிதி, தேர்தல் இடம்பெறும் மூன்று மாகாணங்களில் உள்ள 108 பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளதாகவும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ன தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெறும் மூன்று மாகாணங்களிலும் தற்போது பூரண அமைதி நிலவுவதாவும், சட்டவிரோத சுவரொட்டிகள், பதாதைகளை அகற்றுவதற்காக தேர்தல்கள் ஆணையாளர், 50 லட்சம் ரூபாவை பொலிஸ் திணைக்களத்திற்கு வழங்கியுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அனைத்து பொலிஸ் நிலையங்களிலும், தேவையான தொழிலாளர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதுடன், விரைவில் சட்டவிரோத பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகுமெனவும், மக்கள் இது தொடர்பாக எமக்கு அறிவிக்க வேண்டுமெனவும், செப்டெம்பர் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடாத்தும் வாய்ப்பு கிடைக்குமென எதிர்பார்பதாகவும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment