மத்திய அமைச்சர்களின் சாரதிகளுக்கு வீதிச் சட்டப் பயிற்சி ஜூலை 5ல்
மத்திய அமைச்சர்களின் செயலணி களைப் பயிற்றுவிக்கும் வேலைத் திட்டத்தின் கீழ், தெற்கு, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களின் சாரதிகளுக்கு பயிற்சியளிக்கும் வேலைத்திட்டம் ஜூலை 5 ம் திகதி காலை 8.30 முதல் மாலை 4.30 வரை பத்தரமுல்லை பெலவத்தையில் உள்ள, கட்டிடநிர்மாண மற்றும் இயந்திராதிகள் நிறுவனத்தில் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் சுமேதா ஜயசிங்க தலைமையில் நடை பெறும் என அறிவிக்கப்பட்டள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் சாரதிகளுக்கு வீதிச் சட்டம அறிவு பற்றி பயிற்சி அளிக்க வேண்டும் என ஜனாதிபதியின் பணிப்புரைத்ததற்கிணங்க இந்த முயற்சி இடம் பெறுகின்றது.
0 comments :
Post a Comment