Tuesday, July 24, 2012

4 கட்டங்களின் கீழ் மூன்று மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படும்- மின்சார சபை

லக்விஜய மற்றும் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து தேசிய மின் வழங்கல் தொகுதிக்கு வழங்கப்பட்ட மின் கொள்ளளவை இழக்க வேண்டி ஏற்பட்டதனால், இன்று தொடக்கம் மூன்று மணித்தியால மின்வெட்டினை அமுல்ப்படுத்த, தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

லக்விஜய மற்றும் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து இழந்த மின் கொள்ளளவை, தேசிய மின் வலையமைப்புடன் இணைப்பதே இதன் நோக்கமெனவும், இதற்கமைய, பகல் வேளையில் 2 மணித்தியாலங்களும், இரவில் 45 நிமிடங்களும் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டி ஏற்படும் எனவும், இன்று தொடக்கம் 4 கட்டங்களின் கீழ் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

காலை 08.30 தொடக்கம் 10.45 வரையும், காலை 10.45 தொடக்கம் பிற்பகல் 01.00 மணி வரையும், பிற்பகல் 01.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.15 வரையும், பிற்பகல் 03.15 தொடக்கம் பிற்பகல் 05.30 வரை என்ற 4 கட்டங்களின் கீழ் மின் துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, காலை 08.30 முதல் 10.45 வரை, அநுராதபுரம், வவுனியா, புத்தளம், குருநாகல், சிலாபம், அம்பாறை, திருகோணமலை, கட்டுநாயக, களனி, வெயங்கொட, பன்னிபிட்டிய, எம்பிலிபிட்டிய, பதுளை, நுவரெலியா, அம்பலாங்கொட, தெனியாய, காலி, மாத்தறை, மதுகம, ஹொரணை, பாணந்துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை, தெஹிவளை, வாழைச்சேனை, சபபுகஸ்கந்த, ஹம்பாந்தோட்டை, பெலியத்த, இரத்மலானை ஆகிய பிரதேசங்களை போன்று, கொழும்பை சூழவுளள் வலயத்தில் காலி முகத்திடல், ஜனாதிபதி மாவத்தை, வொக்ஷோல் வீதி, டிக்மன்ட் வீதி, சுதந்திர சதுக்கம், ஜாவத்த, டொரின்டன், ஹோட்டன் பிளேஸ், ரொஸ்மிட் பிளேஸ், பொரளை, கொட்டா வீதி, பான்ஸ் பிளேஸ், வோர்ட் பிளேஸ், டவுன் ஹோல், சுகததாக விளையாட்டு மைதானம், கிரேண்ட்பாஸ், பிரேமதாச விளையாட்டு மைதானம் மற்றும் அதனை சூழவுள்ள இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்படும். இப்பிரதேசங்களில் இரவு நேரத்தில் பிற்பகல் 06.30 தொடக்கம் 07.15 வரையும், மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

அத்துடன் முற்பகல் 10.45 தொடக்கம் பிற்பகல் 01.00 மணி வரை, பம்பலபிட்டி மாடி வீட்டுததொகுதி, கிருலப்பனை, மாளிகாவத்த, ஜேத்தவனவீதி, கொட்டவலமுல்ல, மெசென்ஜர் வீதி ஆகிய பிரதேசங்களில் மின் துண்டிக்கப்படும். இரவு 07.15 தொடக்கம் 08.00 மணி வரை, 45 நிமிட மின் துண்டிப்பு, இப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும்.

யோர்க் வீதி, சத்தம் வீதி, சேர் பாரோன் ஜயதிலக மாவத்தை, காலி முகத்திடலில் ஒரு பகுதி, யூனியன் பிளேஸ், தர்மபால மாவத்தை, லிபர்டி பிளாஸா, கொள்ளுபிட்டி வர்த்தக கட்டிடத் தொகுதி, பம்பலபிட்டிய, எல்வலிட்டிகல மாவத்தை, புஞ்சி பொரளை, தெமட்டகொட, பேஸ்லைன் வீதி, டெக்னிகல் சந்தி, துறைமுகத்தை சூழவுள்ள பிரதேசங்களில் பிற்பகல் ஒரு மணி தொடக்கம், பிற்பகல் 03.15 வரை மின்சாரம் துண்டிக்கப்படும். இப்பிரதேசங்களில இரவு நேரத்தில், 08.00 மணி தொடக்கம் 08.45 வரை மின் துண்டிக்கப்படும்.

பிற்பகல் 03.15 தொடக்கம் 05.30 வரையிலான காலப்பகுதிக்குள், கிரெஸ்கட் இல்லம், என்.டி.பி. வங்கி கட்டிடத் தொகுதி, நவம் மாவத்தை, வெள்ளவத்தை மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்கள், எல்பர்ட் சந்திரவன்ச மாவத்தை, பௌத்தாலோக மாவத்தை, வனாத்தமுல்ல, மெனிங் வர்த்தக கட்டிடத் தொகுதி, புறக்கோட்டை, கொட்டாஞ்சேனை, அல்விஸ் பிளேஸ் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்படுமென, மின்சார சபை அறிவித்துள்ளது. இப்பிரதேசங்களில் இரவு 08.45 தொடக்கம் 09.30 வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும்.

அவசர அழைப்பு இலக்கம் 1987 ஊடாக மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் பேராசிரியர் விமலதர்ம அபேவிக்ரம தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com