கட்டுபொத்த பொலிஸ் நிலைய உத்தியோகத்தருக்கு 4 வருட கடூழிய சிறை
ஊழல் குற்றச்சாட்டுக்கு சுமத்தப் பட்டிருந்த கட்டுபொத்த பொலிஸ் நிலைய முன்னால் உத்தியோகத்தருக்கு, 4 வருட கால கடூழிய சிறை தண்டனையை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஷ,விதித்துள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த குற்றப்பத்திரத்தில், சட்டவிரோத மதுபான வர்த்தகருக்கு எதிராக சட்டத்தை அமுல்ப்படுத்தாது இவரிடம் 14 ஆயிரம் ரூபா இலஞ்சம் கோரியுள்ளதாகவும், இதில் 2 ஆயிரம் ரூபா இலஞ்சமாக பெறப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்பட்டிருந்தது.
இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுக்கள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கினார்.
0 comments :
Post a Comment