தேர்கள் பணிகளுக்காக 41 ஆயிரம் அரச ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.
எதிர்வரும் மாகாண சபை தேர்தலை நீதியாகவும், நேர்மையாகவும் நடாத்து வதற்காக 41 ஆயிரம் அரச ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
கிழக்கு, வடமத்திய, மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 12ம் திகதி முதல் 19ம் திகதி நண்பகல் 12.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், இத்தேர்தலுக்கான கட்டுப்பணம் எதிர்வரும் 14ம் திகதி நண்பகல் 12.00 மணி ஏற்கப்படும் எனவும்,தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 19ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென, தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் 3 ஆயிரத்து 247 வாக்கு சாவடிகள் தேர்தலுக்காக அமைக்கப்படவுள்ளதாவும், அத்துடன் வாக்கெண்ணும் பணிகளுக்காக, 236 மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும், வாக்கு சாவடிக்கு 10 அரச ஊழியர்கள் என்ற ரீதியில் 32 ஆயிரத்து 470 பேரும், வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு தலா 40 அதிகாரிகள் வீதமும் மொத்தம் 9 ஆயிரத்து 442 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment