வாகரையிலிருந்து அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட படகுடன் 40 பேர் கைது.
சட்டவிரோதமாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட நாற்பது பேரை வாகரை மாங்கேணி துறையில் வைத்து வாகரை பொலிஸார் நேற்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.பி.ஜெயசீலன் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், இரண்டு குழந்தைகளும், 37 ஆண்களுமாக 40 பேர் அடங்குகின்றனர். நேற்று வியாழக்கிழமை இரவு 7.45 மணியளவில் மாங்கேணியிலிருந்து அவுஸ்ரேலியா செல்வதற்கான இரண்டு படகுகள் ஆயத்தமாக இருந்தது.
இதில் புத்தளம், சிலாபம், திருகோணமலை, முல்லைத்தீவு, வல்வெட்டித்துறை, காரைதீவு போன்ற பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கு இவர்கள் பயன்படுத்திய இரண்டு படகு, இரண்டு வான், ஆட்டோ மற்றும் பெருந்தொகையாக உணவு, மருந்துப் பொருட்கள் போன்றவை யாவும் கைப்பற்றியதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று வெள்ளிக்கிழமை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தி நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இதற்கு உடந்தையாக இருந்த முகவரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment