Monday, July 2, 2012

இந்தியாவில் 4 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்யும் நிலையாம்.

இந்தியாவில் சமூக, பொருளாதார காரணங்களால் 4 நிமிடத்துக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உள்ளதாக அன்நாட்டு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கிணங்க, 2010 ஆம் ஆண்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 599 பேரும், 2011 ஆம் ஆண்டு 1 லட்சத்து 35 ஆயிரத்து 585 பேரும், தற்கொலை செய்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

இவ்வாறு தற்கொலை செய்துகொள்பவர்களில் மேற்கு வங்காளம் முதலிடத்தில் உள்ளதாகவும், இங்கு 16 ஆயிரத்து 492 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், இரண்டாவது இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 15 ஆயிரத்து 947 பேர் தற்கொலை செய்துள்ளதாகவும், மூன்றாவது இடத்தில் உள்ள மராட்டியமும், 4 வது இடத்தில் ஆந்திராவும், 5 வது இடத்தில் கர்நாடகமும் உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment