அமைச்சர்மாரின் 4 பிள்ளைகள் ஐ.தே. கட்சியில் போட்டியிட கோரிக்கை விடுத்துள்ளார்களாம்- UNP
இம்முறை மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மத்திய அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முன்வந்துள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைச்சர்மாரின் நான்கு பிள்ளைகள் உட்பட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் தொடர்ந்து அரசியல் செயது வரும் பலர் இவ்வாறு அண்மையில் நடக்க விருக்கும் மூன்று மாகாண சபைகளுக்கு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் போட்டியிட கோரிக்கை விடுத்திருப்பதாக அத்தநாயக்கா மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்காக பலர் தம்மோடு தொலைபேயில் தொடர்பு கொண்டுள்ளதாகவும், இது பற்றி சார்பாகவும், எதிராகவும் கட்சியினரிடையே கருத்துக்கள் நிலவுவதால், இன்று கூடும் செற்குழுவில் இது தொடர்பாக இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment