நித்தியானந்தாவுக்கு ஆண்மை இருக்கிறதா?... 30ம் தேதி 'டெஸ்ட்'!
பெங்களூர்: நித்தியானந்தாவுக்கு ஜூலை 30ம் தேதி ஆண்மை சோதனை நடத்தப்படவுள்ளது. இதுதொடர்பான உத்தரவை அவருக்கு கர்நாடக சிஐடி போலீஸார் அனுப்பியுள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு நித்தியானந்தா பெரும் சர்ச்சையில் சிக்கினார். நடிகையுடன் அவர் அந்தரங்கமாக இருந்ததாக ஒரு வீடியோவை லெனின் கருப்பன் வெளியிட்டார். அதில் இருப்பது நித்தியானந்தாவும், நடிகை ரஞ்சிதாவும் என்று அவர் கூறினார். இதையடுத்து நித்தியானந்தா தலைமறைவானார். பின்னர் இமாச்சலப் பிரதேசத்தில் தலைமறைவாக இருந்த அவரை கர்நாடக போலீஸார் பிடித்துக் கைது செய்து கொண்டு வந்து சிறையில் அடைத்தனர்.
போலீஸ் விசாரணையின்போது தான் ஆண்மையற்றவர் என்றும் தன்னால் உடலுறவில் ஈடுபட முடியாது என்றும் நித்தியானந்தா கூறினாராம். இதையடுத்து அவருக்கு மருத்துவப் பரிசோதனை, குரல் பரிசோதனை உள்ளிட்டவற்றை நடத்த கோர்ட்டிடம் அனுமதி வாங்கியது கர்நாடக போலீஸ். ஆனால் அந்த சோதனைகளுக்கு இதுவரை போகவில்லை நித்தியானந்தா.
இந்த நிலையில், ராமநகரம் கோர்ட்டில் சிஐடி சார்பில் நித்தியானந்தாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டது. அதை ஏற்ற கோர்ட், இதுதொடர்பாக உத்தரவையும் பிறப்பித்துள்ளது. இதையடுத்து ஜூலை 30ம் தேதி பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் நித்தியானந்தாவுக்கு ஆண்மைப் பரிசோதனை உள்ளிட்டவை நடத்தப்படும் என்று கர்நாடக சிஐடி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அவருக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சோதனையின்போது விந்தனு பரிசோதனை, தைராய்டு சோதனை உள்ளிட்டவை நடத்தப்படும். இதில் நித்தியானந்தாவுக்கு ஆண்மை இல்லை என்பது உறுதியானால் அவர் வழக்கிலிருந்து விடுபடும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment