30 வருடங்களின் பின் யாழில் திரையிடப்படவுள்ள சிங்களத் திரைப்படம்
தமிழ் உபதலைப்புடன் புதிதாக தயாரிக்கப்பட்ட சிங்கள திரைப்பட மொன்று 30 வருடங்களுக்கு பின்னர் முதன் முறையாக யாழ்ப்பாணத்தில் திரையிடப்படவுள்ளது. யாழ்ப்பாண த்திலுள்ள ராஜா திரையரங்கில் எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை இத்திரைப்படம் திரையிடப்படவுள்ளது.
"சிஹினய திகே என்ன"என்ற பெயரில் சந்திரரட்ன மப்பிட்டிகம இயக்கிய இப்புதிய திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்படுவதனால் கலையினூடாக சமாதானத்திற்கான புதிய சிந்தனையை கொண்டுவருமெனக் கூறப்படுகின்றது.
சமந்த ரணசிங்கவினால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் சனத் குணதிலக, வீனா ஜயக்கொடி, உதாரி வர்ணகுலசூரிய, அமில அபேசேகர, நயன குமாரி மற்றும் ஏனையோர் பிரதான பாத்திரங்களில் பங்கேற்றுள்ளனர். இத்திரைப்படத்திற்கு முன்னிலை இசையமைப்பாளர் தினேஷ் சுபசிங்க இசையமைத்துள்ளார். அத்துடன் ஒளிப்பதிவு - புத்திக மங்கள, கலை இயக்கம் - பந்துல வீரசேகர, ஒப்பனை – சுபுன் ஸ்ரின்வோல், பதிப்பு – அனுஷ ஜயவர்தன, பிரசாரப்படுத்தல் - பிரைன் ஸ்பிற்ரிள், படப்பிடிப்பு - டிலான் லிகமகே, பாடகர்கள் - உரேஷா ரவிஹரி, துமல் வர்ணகுலசூரிய, கசூன் பிரேமல் ஆகியோரும் இதில் பணியாற்றுகின்றனர்.
ஏனைய நடிகர்கள் - மனெல் வனகுரு, பந்துல விஜேவீர, ரவீந்திர மப்பிட்டிகம, அநுர ஸ்ரீநாத், ஜயஸ்ரீ வீரதுங்க, சன்சஞ்சல வர்ணசூரிய, சமன் அல்மீடியா, மிலிந்த பெரேரா, ஹிமலி கபூகே, ரிதீகா கொடிதுவக்கு, ராஜித ஹிரான் சமிகார, அஜித தர்மபிரிய, சுபோதி பியதர்ஷனி, கிஹானி அமரசேன.
0 comments :
Post a Comment