யுத்ததில் கைவிடப்பட்ட வாகனங்களை 30ம் திகதி க்கு முன் உரியவர்களிடம் கையளிக்க நடவடிக்கை
கடந்த கால யுத்ததின் போது, கைவிடப்பட்ட வாகனங்களை உரியவர்க ளிடம் கையளிக்க அரசாங்கம் நடவடி க்கை எடுத்துள்ளதாகவும், கிளிநொச் சியில் உள்ள வாகன தரிப்பிடத்தில் இதுவரை கைவிடப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இருப்பதாகவும், கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றின் அடையாளத்தை உறுதிப்படுத்தி இவ்வாகனங்களை பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
5983 மோட்டார் சைக்கிள்களும் 130 க்கும் மேற்பட்ட ஏனைய ரக வாகனங்கள், இவ்வாறு உரிமை கோரப்படாத நிலையில் இருப்பதாகவும், மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment