Sunday, July 22, 2012

குடியரசுத் தலைவர் தேர்தல்: பிரணாப் முகர்ஜி அமோக வெற்றி- 25ம் தேதி பதவியேற்பு!

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி வெற்றி பெற்றுளார். இதையடுத்து நாட்டின் 13-வது குடியரசுத் தலைவரானார் பிரணாப் முகர்ஜி. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும் எதிர்க்கட்சிகளின் சார்பில் சங்மாவும் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குப் பதிவின் போது மொத்தம் 8 லட்சம் வாக்குகள் பதிவாகின.

இவற்றை எண்ணும் பணி இன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு தேவையான 5,58,000 வாக்குகளுக்கும் அதிகமாகப் பெற்று தம்மை எதிர்த்துப் போட்டியிட்ட சங்மாவை தோற்கடித்தார். சங்மாவுக்கு சுமார் 2 லட்சம் வாக்குகள் கிடைத்தன.

பிரணாப் முகர்ஜியின் வெற்றியை நாடு முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகள் உற்சாகமாகக் கொண்டாடின. தேர்தலில் வெற்றி பெற்ற பிரணாப் முகர்ஜிக்கு பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் மத்திய அமைச்சர்கள் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி சார்பில் டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தார்.

நாட்டின் புதிய குடியரசுத் தலைவராக வரும் 25-ந் தேதி முற்பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி பதவியேற்கிறார். அவருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவராக 2017-ம் ஆண்டுவரை பிரணாப் முகர்ஜி பதவி வகிப்பார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com