2008 ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள் அட்டைகள் செல்லுபடியாகாது
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், 2008 ம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் செல்லுபடியாகாதென, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மூன்று வருடங்களுக்கு முன்னர், பெற்றுக்கொள்ளப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள், எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாதென, தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் பிரகாரம், தமது அடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு அற்ற நபர்கள் தற்காலிக அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும், தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment