தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகள், அடுத்த மாதம் 20ம் திகதி வரை இடம்பெறும்
நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் பயன்படுத்துவதற்கான தற்காலிக அடையாள அட்டை வழங்கும் பணிகள், அடுத்த மாதம் 20ம் திகதி வரை இடம்பெறவுள்ளதெனவும், சப்ரகமுவ, வடமத்திய, கிழக்கு மாகாண சபை தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும், இதற்கான விண்ணப்பப்படிவங்களை, கிராம சேவை உத்தியோகத்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும், தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 2008 மற்றும் 2009ம் ஆண்டுகளில் இடம்பெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகள் இம்முறை செல்லுபடியாகாதெனவும், குறித்த அடையாள அட்டைகளை கிராம சேவகர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமெனவும், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் தேர்தலுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை, எதிர்வரும் தேர்தல்களில் பயன்படுத்தலாமென, தேர்தல்கள் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment