Friday, July 13, 2012

காதல்வயப்பட்தற்காக ஒரு போராளியின் நெற்றியின் சுட்டார் தகட்டு இலக்கம் 2 மாத்தையா.

இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் ஒரு காட்டுப் பாசறையில், ஒரு பெண் தோழியோடு காதல் வயப்பட்டதற்காக 18 வயது கெரில்லாவான சாந்தனை அப்போதைய எல்ரிரிஈ நம்பர் 2 மாத்தயா சுட்டுக் கொன்றார். சாந்தனை கூடாரத்துக்குள் இட்டுச் சென்ற இரண்டு இளைஞர்கள் இப்போது அவனது கையைப் பிடித்து உடலை இழுத்துக் கொண்டு வந்தார்கள். சாந்தனின் நெற்றிப்ப பொட்டிலிருந்து வழிந்தோடிய இரத்தம் அவனது வெள்ளை மற்றும் நீலநிற சட்டையை நனைத்தது. இவ்வாறு முன்னாள் பெண் போராளி நிரோமி டி சொய்சா எழுதியுள்ள தமிழ் பெண்புலிகள் என்ற புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

நிரோமி டி சொய்சா தனது 17 வயதில் 1987 ஆம்பத்தில் எல்ரிரிஈயில் சேர்ந்தார். தற்போது அவுத்திரேலியாவில் வாழும் அவர், வன்முறை தமிழீழத்துக்கு வழிகாட்டாது என்று தான் உணர்ந்தபோது அந்த குழுவை விட்டு விலகியதாக கூறுகிறார்.

அப்புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கிய விடயங்களை ஐஏஎன்எஸ் கீழ்கண்டவாறு தொகுத்துள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட ஒற்றர்களையும் காட்டிக் கொடுப்பவர்களை எல்ரிரிஈயினர் சித்திரவதை செய்து கொன்றனர். அத்துடன் இலங்கையில் இந்திய அமைதிப் படைக்கு எதிராக போரிட்டபோது தமிழ்க் கடைகளையும் வீடுகளையும் சூறையாடினர்.

ஒருநாள் பிற்பகல், யாழ்ப்பாணத்தில் சுதுமலையில் நிரோமியும் அவளது புலி நண்பர்களும், ' நான் அதைச் செய்யவில்லை, நான் அதைச் செய்யவில்லை' என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தும் வெள்ளை எனப்படும் பதின்ம வயது எல்ரிரிஈ உறுப்பினரை சில ஆண் தோழர்கள் உதைத்து வதை செய்து கொண்டிருந்த்தைக் கண்டனர்..  

வெள்ளையை இந்திய ஒற்றனாக குற்றம் சுமத்தி, தோள்வரை புதைத்து சைனைட்டை விழுங்கும்படி பலவந்தப்படுத்தினார்கள் அது அவனை என்ன செய்யும் என்று பார்ப்பதற்காக என்று தமிழ் பெண்புலிகள் என்ற தனது 308 பக்க புத்தகத்தில் கூறுகின்றார். (மேகா ப்ப்ளிசிங் ஹவுஸ்).
 
கடைசியாக ஒரு எல்ரிரிஈ கெரில்லா ஜஸ்டின் அவனது தலையில் கோடரியால் ஒரு போடுபோட்டார். ' பையன்கள் சிரிப்பொலி எழுப்பினார்கள். அவர்களைப் பொறுத்தளவில் வேலனைக் கொல்வதற்கும் கரப்பான் பூச்சியைக் கொல்வதற்கும் வித்தியாசம் கிடையாது என்று கொலையாளிகளைப் பற்றி நிரோமி கூறுகின்றார்.

பிறகு, இலங்கையின் வடக்கில் வன்னிப் பகுதியில் ஒரு காட்டுப் பாசறையில், ஒரு பெண் தோழிரோடு காதல் வயப்பட்டதற்காக 18 வயது கெரில்லாவான சாந்தனை அப்போதைய எல்ரிரிஈ நம்பர் 2 மாத்தயா சுட்டுக் கொன்றார். சாந்தனை கூடாரத்துக்குள் இட்டுச் சென்ற இரண்டு இளைஞர்கள் இப்போது அவனது கையைப் பிடித்து உடலை இழுத்துக் கொண்டு வந்தார்கள். சாந்தனின் நெற்றிப் பொட்டிலிருந்து வழிந்தோடிய இரத்தம் அவனது வெள்ளை மற்றும் நீலநிற சட்டையை நனைத்தது. ஒருவர் ஜீப்பின் பின் கதவைத் திறந்து சாந்தனின் உடலை உள்ளே போட்டபின், அதை ஓட்டிக் கொண்டு போனார்கள். அதன் பிறகு பாசறையில் யாரும் அந்த கொலையைப் பற்றிக் கதைக்கவில்லை. விம்மிக் கொண்டிருந்த இறந்தவனின் காதலி லோராவைத் தேற்ற யாரும் இல்லை.

 இந்த இளைஞனின் அர்த்தமற்ற கொலையை உள்வாங்கிக் கொள்ள என்னால் முடியவில்லை. எனக்கு அசௌகரியமாக இருந்தது, குழப்படைந்தேன், திடீரென்று அவமானப்பட்டுப் போனேன் என்று நிரோமி எழுதுகிறார்.

 இத்தகைய கொடுமைகளைப் பாரத்த பின்னர், எல்ரிரிஈ தோழர்களை இயக்கும் விழுமியங்கள் பற்றி கேள்வி எழுப்பத் தொடங்கினார் நிரோமி.  எமது அமைப்பில் உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும், எல்ரிரியின் நன்மைக்காகவே தாங்கள் செய்வது யாவும் என்று அவர்கள் நியாயப்படுத்திக் கொள்ளும் யாவற்றையும் அவர்கள் செய்தார்கள். இதற்கு நான் ஆயத்தமாக வில்லை.

நிரோமி எல்ரிரிஈயில் சேர்வதற்கு முன்னர் 1986 ல் யாழ்ப்பாணத்தில் அவர்கள் தமக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்களை படுகொலை செய்தார்கள் என்று புத்தகம் கூறுகின்றது. டெலோ சீருடை அணிந்த உறுப்பினர்களை மரத்தில் கட்டித் தொங்கவிட்டதும் அவர்கள் உயிரோடு இருக்கையிலேயே தீயிட்டுக் கொளுத்தியதும் இவற்றுள் அடங்கும்.

 யாழ்ப்பாணத்தில் தாங்கள் கைதியாகப் பிடித்த மற்றொரு தமிழ் குழுவான ஈபிஆர்எல்எவ் காரர்களையும் எல்ரிரிஈ படுகொலை செய்திருந்தது.. 1987 ல் இருதரப்பு ஒப்பந்த்தின் கீழ் இலங்கை வடகிழக்கில் அமர்த்தப்பட்டிருந்த இந்திய அமைதி காக்கும் படையின் பிடியிலிருந்து தப்பியோடிய போது, எல்ரிரிஈயினர் கடைகளை உடைத்துக் கொண்டு உள்நுழைந்து கோழிகளையும், உடுதுணிகளையும், உணவுகளையும் இன்னும் பலவற்றையும் கொள்ளையடித்துக் கொண்டு போனதை நிரோமி கண்டிருக்கிறார்.

 அவள் அதை ஆட்சேபித்த போது எல்ரிரிஈ உறுப்பினர் ஒருவர். ' நாங்கள் கொள்ளையடிக்காவிட்டால் வேறு யாராவது கொள்ளையடிப்பார்கள் என்றாராம். அத்தகைய நியாயப்படுத்தலில், தானும் தனக்கு சேர்ட், ஷாம்பூ பக்கட்கள், சொக்கலேட் பக்கற்றுக்கள் மற்றும் ஒரு சில சிறுவர் புத்தகங்களை அடித்துக் கொண்டு சென்றதாக நிரோமி கூறுகின்றார்.

ஒப்பனைப் பொருட்களை (எமது கட்டளைத் தளபதி) தடுத்திருந்தாலும், சில (எல்ரிரிஈ) தோழிகள் தோலை வெண்மையாக்கும் பெயார் அண்ட் லவ்லி முகப்பூச்சுக்கள் மற்றும் நகப்பொலிஷ்களை அடுத்துக் பொண்டு செல்லத் தவறவில்லை.

வேறொரு சம்பவத்தில், எல்ரிரிஈ கெரில்லாக்கள் சப்பாத்துகள், சுகாதாரத் துவாய்கள் உள்ளாடைகள் போன்றவற்றை கடையில் கொள்ளையிட்டார்கள். அத்தகைய கொள்ளைகள் இந்திய படைவீரர்கள் மீது சுமத்தப்பட்டது.

 இந்திய அமைதி காக்கும் படையோடு மோதுவதைக் கைவிடும் படி யாழ்பாணத்து மக்கள் தொடர்ந்நும் எல்ரிரியை வேண்டினார்கள்.

எல்ரிரிஈயில் நிரோமியின் ஒரு நெருங்கிய சகா அகிலா. 1991 ல் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவர் அவர். மற்றிருவர் பிரபாகரன் மற்றும் அவரது புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான். 1988 ல் நிரோமி எல்ரிரியை விட்டு விலகிய பின்னர், அகிலா, பெண்கள் புலனாய்வுப் பிரிவின் துணைத் தலைவராக உயர்ந்தார். 1995 ல் யாழ்ப்பாணம் நீர் வேலியில் இலங்கை இராணுவம் அவரைக் கொன்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com