சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெற்றால் 1929 எனும் தொலைபேசி இலக்கத்திற்குதொடர்பு கொள்க.
நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் துரிதமாக அதிகரித்து வருவதனால் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 1929 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறு சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை குறித்த தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளது. சிறுவர் ஒருவர் எவ்வகையிலேனும் துன்புறுத்தப்பட்டால், அது தொடர்பாக 1929 எனும் தொலைப்பேசி இலக்கத்திற்கு முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறைப்பாடுகள் பகிரங்கமாக வைக்கப்படுவதுடன், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முன்னர் இடம்பெற்ற சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக தகவல்கள் தெரிந்தால் அது தொடர்பாகவும் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்காக அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் இதற்கு உரிய ஆதரவை மக்கள் வழங்க வேண்டுமெனவும் அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment