பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 18 பொதுமக்கள் பலி
பாகிஸ்தானில் Balochistan மாகாணத்தில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 18 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந் துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தானில் Balochistan மாகாணத்தில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத நபர்கள் ஷியா முஸ்லிம் மக்கள் பயணத்த பேரூந்தின் மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பில் தகவல்கள் வெளியடப்படவில்லை.
குறித்த சம்பவம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் Raja Pervez Ashraf தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார். அத்துடன் இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணகளை மேற்கொள்வதற்கு நீதிமன்ற குழுவொன்றை அமைக்குமாறு ஷியா முஸ்லிம் அமைப்பினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த சம்பவத்திற்கு எந்த ஒரு அமைப்பும் உரிமை கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment