நேபாள சிறுமிகளை, இந்திய விபசார விடுதிகளுக்கு விற்ற நபருக்கு, 170 ஆண்டு சிறை
நேபாளத்தை சேர்ந்த சிறுமிகளை இந்தியாவில், விபசார விடுதிகளுக்கு விற்ற நபருக்கு, 170 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தின் சித்துபால் ஷிக்கார்பூர் கிராமத்தை சேர்ந்த பஜிர்சிங் என்பவருக்கே இவ்வாறு தண்டமை வழங்கப்பட்டுள்ளது.
ஷிக்கார்பூர் கிராமத்தை சேர்ந்த 14 வயது முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆறு பேரை, இந்தியாவிற்கு, விபசாரத்துக்காக கடத்திச் சென்று விற்பனை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பஜிர்சிங்குக்கு, நேபாள மாவட்ட நீதிமன்றம் 170 ஆண்டுகள், சிறை தண்டனை மற்றும் 13 லட்ச ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த நபருக்கு உதவியாக இருந்த இரு நபர்களுக்கு 16 ஆண்டு மற்றும் 12 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment