அமைதி தொடரந்து வேண்டுமானால் 13வது அரசிய லமைப்புத் திருத்தம் முற்றாக நீக்கப்பட வேண்டுமாம்
நாட்டுக்கு எதிரான சதித்திட்டங்களுக்கு மூல காரணமாக இருக்கும் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை முற்றாக நீக்க வேண்டும் என்றும், அதற்கு முதல்படியாக அதன் கீழுள்ள மாகாண சபைகளுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கூறும் சரத்து நீக்கப்பட வேண்டும் என்றும், தேசப்பற்று தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர கூறியுள்ளார். கொழும்பு சவ்சிரிபாய கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, இன்று உண்ணாட்டு வெளிநாட்டு நெருக்குதல்கள் நாட்டில் இடம் பெறுகின்றன. விசேடமாக 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும்படி கட்டாயப் படுத்துகிறார்கள் என்பதை நாம் அறிவோம். எனவே தற்போது நாட்டில் நிலவும் அமைதி தொடரந்து நிலை பெறவேண்டும் என்றால் 13 வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சியம் மகாநிகாயவின் மல்வத்தை மகாநாயக்கர் நெலிகம விஜிதநந்த ஹிமி (சகபகமுவை மகாசங்க சபை) பேசும் போது, இந்நாட்டில் பல பிரதேசங்களிலும் வாழும் இலங்கை மக்கள் எதிர் காலத்தில் வெளிநாட்டவரின் இம்சைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவித்துள்ளார். எல்.ரி.ரி.ஈ ஆதரவாளர்கள் மீண்டும் அராஜகம் புரிய ஆரம்பித்து விட்டார்கள் என்றும் இந்த அழுத்தங்களுக்கு இடம் கொடுத்தால், வடக்கு ஒரு துண்டு, கிழக்கு ஒரு துண்டு என்று நாடு பல துண்டுகளாக உடைந்து விடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தேசப்பற்று தேசிய அமைப்பின் பொதுச் செயாலாளர் மருத்துவர் வசந்த பண்டார பேசுகையில், சரத் பொன்சேகா சொல்லும் அரேபிய ரோஜா வசந்தம், ரணில் சொல்லும் வடக்கு மாகாண சபைக்கு உடனடித் தேர்தல் நடத்த வேண்டும் என்பதெல்லாவற்றுக்கும் பின்புலம் பன்னாட்டு அழுத்தம்தான் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment