கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நாளை 12.00 மணியுடன் நிறைவு!
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 11 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.
மாகாண சபை தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடை வதுடன் வேட்பு மனு தாக்கல் நாளை மறுதினம் நிறைவடையுமென, தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபை தேர்தலுக்காக இன்று முற்பகல் 10 அரசியல் கட்சிகள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ததுடன், 32 சுயேட்சைக்கு குழுக்கள், கட்டுப்பணம் செலுத்தியுள்தாகவும் ஒரு சுயேட்சைக்குழு வேட்பு மனுவை கையளித்துள்ளதாகவும் தெரிவிக்ப்படுகின்றது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்திற்காக, 11 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக, மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தில் 3 அரசியல் கட்சிககள் வேட்பு மனுவை கையளித்துள்ளதாகவும், மாவட்ட தெரிவித்தாட்சி உத்தியோகத்தர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment