சிரியாவில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்ட அரபு நாட்டவர்கள் 11 பேர் கைது
சிரிய படையினரின் நடவடிக்கைகளை உளவு பார்த்த அரபு நாடுகளைச் சேர்ந்தவர்கள் 11 பேர் சிரியா நாட்டின் தலைநகர் Damascus இல் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அந்நாட்டு ஜனாதிபதிக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதனால் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக என ஐ. நா தெரிவித்துள்ளது.
இன்நிலையில் சிரியா ஆர்ப்பாட்டகாரர்களுக்கு சவூதிஅரோபியா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவி வழங்கி வருவதாக சிரியா அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், சிரிய நாட்டு படையினரின் நடவடிக்கைகள் குறித்து உளவு பார்த்து குற்றச்சாட்டில் 11 அரபு நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரியா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் சிரியாவின் Homs நகரில் சவூதி அரேபியாவின் புலனாய்வு முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment