Monday, July 2, 2012

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 11 பேர் கைது

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற மேலும் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகபொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

கதிர்காமத்தில் தங்கு விடுதியொன்றிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக தயாராகவிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் முல்லைத்தீவு, உடப்பு, மற்றும் நீர்கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இன்று அதிகாலை 1.30 மணிக்கு கல்குடா கரையில், அவுஸ்திரேலியா செல்வதற்கு தயாராகவிருந்த மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கையின் துறைமுகம் அல்லது விமான நிலையம் அல்லாத பகுதிகளிலிருந்து வெளிநாடு செல்ல முற்படுவது அல்லது வெளிநாடு செல்வது என்பது சட்டவிரோதமான விடயமாகும், என தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர், முகவர்கள் மூலம் ஆட்களை அவுஸ்திரேலியாவிற்கோ அல்லது ஐரோப்பியாவிற்கு பயணம் செய்வது நடைமுறை சாத்தியமானதல்ல எனவும், இவ்வாறு செல்வோர் நடு கடலில் மரணிக்க வேண்டி ஏற்படும் அல்லது ஏதாவது ஒரு சிறிய நாட்டில் நிர்கதியாக வேண்டிய நிலை ஏற்படும் எனவும், எனவே இது போன்ற மோசடி பேர்வழிகளிடம் ஏமாற வேண்டாமென கேடடுக் கொள்கிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment