புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மேலும் 16 எல்.ரி.ரி.ஈ உறுப்பினர்கள் சமூகமயப் படுத்தப்படவுள்ளதாகவும், இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதாக, புனர் வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி கட்டத்தில் தவறான வழிகளில் நடத்தப்பட்ட 12 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தினரிடம் சரணடைந்ததாகவும், அவர்களில் 11 ஆயிரத்து 500 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டுள்ளதுடன், இவர்களில் சிறிய தொகையினருக்கு தொடர்ந்தும் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாவும், இவர்களில் 16 பேர் 4 ஆம் திகதி சமூகமயப்படுத்துவதற்காக அவர்களின் பெற்றோர்களிடம் அல்லது பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
வெலிகந்த, சேனபுர புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் இவ்வைபவம் இடம்பெறவிருக்கின்றது என தெரிவித்த ஆணையாளர் நாயகம், இவர்களுக்கு தொழில் பயிசிகள் வழங்குவதற்கும், பொருத்தமான தொழில் ஒன்றை பெற்றுக் கொடுக்கவும், சுய தொழில்களை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment