கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணம் எதிர்கொள்ளப்போகும் தேர்தல் நிலைமைகள் தொடர்பில் பிரதி அமைச்சர் முரளிதரன் அவர்கள் இலங்கைநெற் இற்கு தெரிவிக்கையில் முன்னைநாள் முதலமைச்சருக்கு எதிர்காலத்தில் வாய்பே இல்லை என்றார்.
எதிர்வரும் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றியீட்டும் என தெரிவித்த அவர் தமிழர் தரப்பிலிருந்து மிகவும் ஆழுமை மிக்கவர்களையும் கதிரைகளுக்கு பொருத்தமானவர்களையும் வேட்பாளர்களாக நிறுத்துவதற்கான சகல ஏற்பாடுகளையும் தான் மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல முஸ்லிம் கட்சிகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதுடன் முதலமைச்சர் வேட்பாளர் என எவரும் நிறுத்தப்படமாட்டார்கள் எனவும் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெறுகின்றவர் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமது விருப்புவாக்குகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுகின்ற பொருத்தமான ஒரு தமிழருக்கு குவிக்கவேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
No comments:
Post a Comment