நான்காக துண்டாடப்படும் LLRC
LLRC பரிந்துரைகள் (1) தேசிய கொள்கை, (2) போரின் கடைசிக் கட்டம், (3) மனிதவுரிமையும் பாதுகாப்பும் மற்றும் (4) மீளக்குடியமர்த்தல், வளர்ச்சிப்படுத்தல் மற்றும் மனிதானிபான விடயங்கள் என்ற நான்கு வகைப்படுத்தலின் கீழ் நடைமுறைப் படுத்தப்படும் என்று அமெரிக்காவுக்கு விளக்கப்பட்டுள்ளது.
ஜீஎல் பீரிஸ் அமெரிக்காக சென்று பேசிய விடயங்கள் தொடர்பில் நாட்டுக்கு தெரியப்படுத்தப்படவில்லை என பாராளுமன்றத்தில் ஜேவிபி பா.உ உறுப்பினர் அனுர திசாநாக்காவின் கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்திற்குப் பின்னர், LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துலக தொழினுட்ப உதவியை நாடும்படி ஐநா மனிதவுரிமைச் சபை வற்புறுத்தியது. மேற்படி தீர்மானத்தின் பின்னர் அமெரிக்க ராஜாங்க செயலாளர் வெளிநாட்டமைச்சரை அழைத்தார். அமெரிக்காவுக்கு வழங்கிய நடவடிக்கைத் திட்டம் என்ன. அதனை மக்களுக்கு வழங்க வேண்டும் என்று திசநாயக்கா எழுப்பிய கேள்விக்கே சில்வா இவ்வாறு பதிலளித்தார்.
நடைமுறைப்படுத்தல் ஜனாதிபதியின் கீழ் ஜனதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
0 comments :
Post a Comment