LLRCயில் சாட்சி பகர்ந்தோருடன் OHCHR கலந்துரையாடல்
LLRC முன்னாள் சாட்சியமளித்த குடிமக்களிடம் கலந்துரையாடல் நடாத்த ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் உயர் ஆணையாளர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இது தொடர்பான தனது முறைப்படியான கோரிக்கைக்கு இலங்கை அரசு இணங்காவிடின், இலங்கையில் மனிதவுரிமை விடங்களில் ஆர்வமுடன் செயல்படும் மூன்றாந் தரப்பினர் ஊடாக இதை மேற்கொள்ள விருப்பதாகவும் தெரிய வருகின்றது.
உண்மைகளைக் கண்டறிவதற்காக ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் உயர் ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை வருகையில் இது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்றாலும், இதற்கான முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டுளதா என்று தெரியவில்லை.
பிள்ளையின் உத்தேச வருகைக்கு தேசியவாத அரசியல் தரப்புகள் ஏற்கனவே அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. அண்மையில் இலங்கை வெளிநாட்டமைச்சர் ஜி.எல்.பீரிஸை சந்தித்தபோது, பிள்ளையின் வருகைக்கு உதவி வழங்குமாறு அமெரிக்க வெளிநாட்டுச் செயலாளர் ஹிலாரி கிளின்டன், பீரிஸைக் கேட்டுள்ளார்.
சரணடைய வந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக LLRC அறிக்கை கூறுகின்றது. இது தொடர்பாக விபரங்களை அறிவதற்கே ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைகள் உயர் ஆணையம் முயல்கின்றது.
மேற்படி ஆணையத்தில் பொறுப்புக் கூறல், மீள் உறவு மற்றும் LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் என்பவை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான வெற்றிகரமான பிரேரணையை அமெரிக்கா கொண்டுவந்ததும், தற்போது அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்பட்டிருக்கும் மிச்சேல் சிசன் பொறுப்புக் கூறல், மீள் உறவு மற்றும் LLRC பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் என்பவை கொழும்பில் தனது பணியில் முன்னுரிமை பெற்றிருக்கும் என்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment