KP எனப்படும் குமரன் பத்மநாதனின் நிதி முகாமையாளரான பொன்னையா ஆனந்தராஜா என்பவர் எல்.ரி.ரி.ஈ யின் பன்னாட்டு நிதிக்குத் துணை போவதாக நெதர்லாந்தில் குற்றம் சுமத்தப்பட்ள்ளார். ஆனால், இங்கு KPக்கு எதிராக எந்த வித குற்றச்சாட்டும் சுமத்தப் படவில்லை, அதற்கான காரணம் என்ன என்று ஜக்கிய தேசிய கட்சி பாராளமன்ற உறுப்பினர் தயாசிரி ஜயசேகர பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் தினேஷ் குணவர்தனா, கேப்பியைப் பற்றி ஏதேனும் பதில் தேவையானால்,அதுபற்றி தனியான வாய்மூல கேள்வி எழுப்ப வேண்டுமெனவும் , எல்.ரி.ரி.ஈ.யின் பன்னாட்டு நிதிக்கு தலைவர் கேப்பிதானா என்ற ஜயசேகரவின் கேள்விக்கு, ஜயசேகராவின் எதிர்பார்ப்புகளைத் திருப்திப்படுத்துவதற்குப் பதிலளிக்க மாட்டேன் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment