அரசாங்கம் எதிர்வரும் மாதங்களில் நடாத்த திட்டமிட்டுள்ள தேர்தல்களை ஐதேக, மவிமு உட்பட அனைத்து எதிரக்கட்சிகளும் புறக்கணிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தேர்தல்களில் ஈடுபட்டு நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்றும் முன்னாள் மவிமு பாராளுமன்ற உறுப்பினரான லால் காந்த கூறினார்.
அரச பலத்தைப் பயன்படுத்தி அடிக்கடி தேர்தல் நடாத்தி வெற்றி பெறுவது அரசாங்கத்துக்கு கட்டாயமானதாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர் இப்பொழுது மாகாண சபைத் தேர்தல்கள் பற்றிக் கதைக்கின்றனர். ஒவ்வோரிடத்திலும் அவ்வப்போது தேர்தல் நடத்தப் பார்க்கின்றனர். அதில் பயன் இல்லை. முழு அரச பலத்தைப் பயன்படுத்தி அந்த மாகாண சபையைக் கைப்பற்றி விடுகின்றனர். நாங்கள் கூறுகின்றோம் எல்லா மாகாண சபைகளையும் கலைத்துவிட்டு ஒரே நாளில் தேர்தல் நடாத்தும்படி. அப்படி இல்லாது விட்டால் யூஎன்பி, ஜேவிபி உட்பட சகல கட்சிகளும் இணைந்து தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். அப்போது இந்த அரசாங்கத்தின் பெயர் கெடும். அதுதான் நாட்டுக்கு இப்போது தேவை. நிறைவேற்று ஜனாதிபதி உள்ள நாட்டில் பாராளுமன்றம் என்பது வெறும் பொம்மைதான்.
சம்பிக்க ரணவக்கைகள், விமல் வீரவன்சகள் அரசாங்கத்தைவிட்டு வெளியேற முயல்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு போகஇடமில்லை. சமூகம் அவர்களை ஏற்றுக் கொள்ளாது என்றார் லால்காந்த.
No comments:
Post a Comment