Sunday, June 24, 2012

Future Minds 2012 கண்காட்சி பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைப்பு (படங்கள்)

நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல் வதற்கு இளைஞர்கள் தமது கல்வியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உள்நாட்டு பல்கலைக் கழகம் ஒன்றில் நுழைவதற்கு இயலாமல் போவதை ஒரு தடையாகக் கொள்ளக் கூடாது என்றும், கல்வியை மேம்படுத்த பல்வேறு வழிகள் இருக்கின்றன என்றும், கொழும்பு BMICH இல் நடைபெறும் Future Minds 2012 கண்காட்சியை நேற்று திறந்து வைத்த பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஷபக்ஷ தெரிவித்துள்ளார்.

இக்கண்காட்சி தொடர்ச்சியாக ஏழாவது தடவையாக நடைபெறும் தேசிய கல்வி மற்றும் தொழில் கண்காட்சியாகும். நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, கனடா, பிரித்தானியா அமெரிக்கா மற்றும் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் 177 க்கும் அதிகமான கல்வி நிறுவனங்கள் தமது நிறுவனங்களின் கல்வி வாய்ப்பு வசதிகள் பற்றி மாணவருக்கு விளக்கி உற்சாகப் படுத்துகின்றனர்.
















No comments:

Post a Comment