இரண்டு இணையத்தளங்களை சுற்றிவளைத்த CID யினர் அவற்றிக்கு சீல் வைத்துள்ளனர்
தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்ததாக கருதப்படும், இணையத்தளங்களை நடத்திச் சென்ற அலுவலகமொன்றை சுற்றிவளைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் அவற்றிற்கு சீல் வைத்துள்ளனர், என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவுக்கமைய அங்கு சோதனையிட்ட பின்னரே, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நியைத்தின் பணிப்பாளர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்பட்டுள்ளது.
இந்த இரண்டு இணையத்தளங்களும் தவறானதும், சமூகத்தை தவறாக வழிநடத்தும் தகவல்களை வெளியிட்டு, தேசிய மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வந்துள்ளதாகவும், அங்கிருந்த கணணிகளில் இருந்து அரசாங்கத்திற்கு எதிரான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையினுள் இயங்குகின்ற செய்தி இணையத்தளங்கள் கட்டாயமாக பதிவுசெய்யப்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது.
0 comments :
Post a Comment