சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமன்றி எடுத்துச்செல்லப்பட்ட பெரும் எண்ணி க்கையிலான தேக்கு மரக்குற்றிகள் மற்றும் சட்டவிரோதமாக அகழ்ந் தெடுக்கப்பட்ட மணல் என்பவற்றை , ஏறாவூர் பொலிஸார் நேற்று அதிகாலைகைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு, சந்தனமடு ஆறுகாட்டுப் பிரதேசத்திலிருந்து சட்டவிரோதமாக வெட்டி அனுமதிப்பத்திரமன்றி எடுத்துச் செல்லப்பட்ட போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இச்சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகள் மற்றும் உழவு இயந்திரத்தையும், பொலிஸார் தடுத்து வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுளனர். இம்மரக்குற்றிகள், அரச காடுகளிலிருந்து வெட்டப்பட்டு, பற்றைக்காடுகளுக்குள் மறைத்து, களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன. இரவு வேளையில், மாட்டு வண்டிகளில் ஏற்றிச்செல்ல முற்பட்ட போது, பொலிஸாரினால் வலையில் சிக்கியுள்ளது.
நீண்ட நாட்களாக இம்மரக்கடத்தல் இடம்பெற்றிருக்லாமென, ஏறாவூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கமைய, போதைவஸ்து தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி அமரசிங்க தலைமையிலான குழு,இம்முற்றுகையை மேற்கொண்டுள்ளது.
No comments:
Post a Comment