கொச்சிக்கடை அருள்மிகு கருமாரி அம்மன் ஆலயத்தில் புண்ணிய கிராமம் செயலமர்வு (படங்கள்)
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் நீர்கொழும்பு விவேகானந்த நலன்புரி நிலையத்துடன் இணைந்து நடத்திய “புண்ணிய கிராமம் - 2012 “ செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நிர்கொழும்பு – கொச்சிக்கடை, ஹேன்முல்லையில் அமைந்துள்ள அருள்மிகு கருமாரி அம்மன் ஆலயத்தில் காலை 8.30 மணிமுதல் நடைபெற்றது.
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலாசார உத்தியோகத்தர் நிர்மலா கருணானந்த ராஜா வரவேற்புரை நிகழ்த்தினார்.
கலாபூசணம் குமாரசாமி சோமசுந்தரம் “போதைப் பொருள் ஒழிப்பு” எனும் தலைப்பிலும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் தேவகுமாரி ஹரன் “பசுவதையை தடைசெய்தல்” எனும் தலைப்பிலும், உரையாற்றினர்.
நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்ற அறநெறிப் பாடசாலை, கொச்சிக்டை விவேகானந்த அறநெறிப் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அங்கு இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்
0 comments :
Post a Comment