Thursday, June 28, 2012

பெரும்போக அறுவடை இடம்பெறும் வரை, அரிசி ஏற்றுமதி நிறுத்தம்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும் பெரும்போக அறுவடை இடம்பெறும் வரை, அரிசி ஏற்றுமதி நிறுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

பெரும்போக அரிசி உள்ளுர் சந்தைக்கு கிடைக்கும் வரை நுகர்வோருக்கு நியாய விலையில் அரிசியை பெற்றுக்கொள்ளும் வகையில், அரிசி ஏற்றுமதிக்கு தடை விதிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக, நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

2012-2013 பெரும்போக நெல் அறுவடை இடம்பெறும் வரை, இத்தீர்மானம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நெற் சந்தைப்படுத்தும் சபையின் கீழ், 2 லட்சத்து 4 ஆயிரத்து 262 மெட்ரிக் தொன் நெல்லும், மாவட்ட செயலகங்களுக்கூடாக நெல்லை கொள்வனவு செய்யும் திட்டத்தின் கீழ், 59 ஆயிரத்து 786 மெட்ரிக் தொன் நெல்லும் தற்போது அரசின் கையிருப்பில் உள்ளன.

தற்போது அரசின் வசமுள்ள குறித்த நெல்லினை தொடர்ந்தும் விநியோகிப்பதற்காக, 4 ஆயிரத்து 111 மில்லியன் ரூபாவை அரசாங்கம் முதலீடு செய்துள்ளது. தனியார் நெல் ஆலை உரிமையாளர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் ஆகியோருடன் 12 லட்சம் மெட்ரிக் தொன் நெல் மற்றும் அரிசி கையிருப்பில் உள்ளதாக, கணிப்பிடப்பட்டுள்ளது.

நெல் மற்றும் அரிசி ஏற்றுமதியை தடை செய்வததன் மூலம் வாழ்க்கை செலவு உயர்வினை கட்டுப்படுத்துவதுடன், நியாயமான விலையில் அரிசியை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கும் சூழ்நிலையும் உருவாகியுள்ளதாவும் விசேடமாக வெளிநாட்டு சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் அரிசி ஏற்றுமதியின்போது, ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டாளரின் விசேட அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டுமென, நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com