Friday, June 8, 2012

த.தே.கூட்டமைப்பு வந்தால் தான் நாமும் தெரிவுக் குழுவில் பங்கு கொள்வோம் என்கிறது ஐ.தே.கட்சி

இனப்பிரச்சினைத் தீர்வு பற்றி கலந்தா லேசிக்க அரசு அமைத்துள்ள பாராளு மன்றத் தெரிவுக்குழுவுக்கு, தமிழரின் பிரதான கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதியை அனுப்பினால் மட்டுமே, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது பிரதி நிதியை அனுப்பும் என்று ஐ.தே.க. பா.உ. காமினி ஜயவிக்கிரம பெரேரா தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்போ வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு காணி, பொலிசு அதிகாரங்களை வழங்குதற்கு அரசு உறுதியளித்தால் மாத்திரமே மேற்படி தெரிவுக் குழுவில் பங்குபற்ற முடியும் என்று விடாப்பிடியாக நிற்கின்றது. அரசோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு வந்தால்தான் பிரச்சினை தொடர்பில் பேச முடியும் என்கின்றது.

பெரும்பாண்மைக் கட்சிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதிலிருந்து தப்பி செல்ல தமிழர் தரப்பே வழிவிட்டுக் கொடுக்கின்றனர் என்பதற்கு இவ்விடயம் தற்போதைய சான்றாக நிற்கின்றது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.


1 comment: