இலங்கை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் இரண்டாம்நிலைத் தளபதி ஒருவர் குறிப்பிடத்தக்களவு தனது சகாக்களுடன் பிரித்தானியாவில் நிலைகொண்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எலிசபத் மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களுக்கு புறப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்னர் தனது சகாக்களுடன் புறப்பட்டு சென்ற அவர் தீவிர காண்காணிப்பு பணியில் இறங்கியுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
பலநாடுகளின் பாதுகாப்பு கல்லூரிகளில் விசேட புலனாய்வு பயிற்சி பெற்ற இக்குழுவினர் தேசிய பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் பிரித்தானியாவிலுள்ள சாமானிய தமிழ் மக்கள் புலிகளின் முன்னணி அமைப்புக்களால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் பங்கு கொள்ள தயக்கம் காட்டுவதாகவும், அவ்வாறு சிலர் கலந்து கொண்டாலும் அவர்கள் நோக்கங்கள் தொடர்பான தெளிவின்மை அற்றவர்கள் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.
மேலும் பிரித்தானியாவில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற சில எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றவர்கள் இலங்கையிலிருந்து தப்பி சென்றுள்ள புலிகளும் : அவர்களின் தீவிர ஆதரவாளர்களும் என அறிந்து கொண்டுள்ள புலனாய்வுப்பிரிவினர் அவர்களை இனம்கண்டு கொள்வதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
No comments:
Post a Comment