போர் பற்றித் தெரியாதோர் புறங்கூறித் திரிகின்றனர்-சரத் பொன்சேகா
போர் பற்றித் தெரியாதவர்கள் அர்த்தமற்ற கதைகள் கூறுகிறார்கள் என்றும், 2009 ஏப்ரல் 19ம் திகதியே போர் முடிந்து விட்டதாகவும், அதற்குப் பிறகு நடந்தவையெல்லாம் துடைத்து சுத்தம் செய்யும் வேலைகளே, என்று முன்னால் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மேலும், போரின் இறுதி வாரத்தில் உத்தியோகபூர்வமாக நான் சீனாவுக்குச் சென்றிருந்ததாக குற்றம் சாட்டுபவர்களுக்கு, நான் சீனாவுக்குப் புறப்பட முன்னரே புலிகளின் படை சீரமைக்க முடியாத அளவுக்கு அழிக்கப்பட்டு விட்டதும், புலியுறுப்பினர்கள் படையினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டதும், அவ்வாறு குற்றம் சாட்டுபவர்களுக்கு தெரியாது என கொழும்பில் அண்மையில் நடாத்திய ஊடக மகாநாட்டில் சரத் பொனசேகா தெரிவித்துள்ளார்.
எனது சீன விஜயம் மூன்று முறை பின்போடப்பட்டது. போர் முடிவுக்கான எல்லா ஏற்பாடுகளும் முடிந்த பின்னரே நான் மே 11-17 காலப் பகுதியில் சீனாவுக்குச் சென்றேன். அங்கிருந்து தினமும் மூன்று முறை முன்னேற்றம் பற்றி எனது அலுவலர்களிடம் போனில் தொடர்பு கொண்டேன்.30 ஆண்டுகள் நீடித்த போரை நான் பதவியேற்று 2 ¾ ஆண்டுகளில் முடித்தேன். மே 19 காலை 10 மணியளவில் போர் நிறைவு பெற்றது. நீரேரியின் கரையில் பிரபாகரனின் உடலும் காணப்பட்டது என்றார் பொன்சேகா.
0 comments :
Post a Comment